இரவில் தூங்கும் முன் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா? வைத்தால் என்னாகும் தெரியுமா?

Photo of author

By Divya

இரவில் தூங்கும் முன் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா? வைத்தால் என்னாகும் தெரியுமா?

Divya

தலைக்கு எண்ணெய் வைத்துவிட்டு உறங்கினால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.தலைக்கு எண்ணெய் வைத்தால் உடல் சூடு தணிந்துவிடும்.தலைக்கு எண்ணெய் வைத்தால் முடி சேதமாகாமல் இருக்கும்.தினமும் தலைக்கு எண்ணெய் வைத்து உறங்கினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1)தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்து உறங்கினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

2)தலைக்கு எண்ணெய் வைத்துவிட்டு தூங்கினால் முடி உதிர்வு,முடி வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

3)தலைக்கு எண்ணெய் வைத்தால் உச்சந்தலை சூடு தணியும்.உச்சந்தலைக்கு எண்ணெய் வைத்தால் முடி ஆரோக்கியம் மேம்படும்.

4)தலைக்கு எண்ணெய் வைத்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்க தலைக்கு எண்ணெய் வைக்கலாம்.

5)தலைமுடி அடர்த்தி அதிகரிக்க,தலை வறட்சி ஆகாமல் இருக்க எண்ணெய் வைக்கலாம்.தேங்காய் எண்ணெய் தடவினால் கூந்தல் ஆரோக்கியம் மேம்படும்.இரவு நேரத்தில் தலைக்கு எண்ணெய் வைத்தால் மண்டை சூடு தணியும்.செம்பருத்தி எண்ணெய்,தேங்காய் எண்ணெய்,விளக்கெண்ணெய் போன்றவற்றை தலைக்கு வைக்கலாம்.

சிலர் சைனஸ் பிரச்சனை ஏற்பட்டுவிடும் என்று எண்ணெயை சிறிது சூடாக்கி பயன்படுத்துகின்றனர்.ஆனால் இப்படி செய்தால் தலைமுடி உதிர்வு ஏற்படும்.அதேபோல் தலைக்கு அதிகளவு எண்ணெய் வைப்பதை தவிர்க்க வேண்டும்.தலைக்கு அதிக எண்ணெய் வைத்தால் முகத்தில் பருக்கள்,எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவை ஏற்படலாம்.

சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் எண்ணையில் மிளகு சேர்த்து ஊறவைத்து பின்னர் தலைக்கு பயன்படுத்தலாம்.தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் தலைமுடி வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும்.