வெயில் காலம் வந்துவிட்டால் சில உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.குறிப்பாக உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அந்தவையில் வெல்லம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
வெல்லம் கருப்பு சாறில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு பொருளாகும்.இந்த வெல்லம் பொங்கல்,ஸ்வீட் போன்றவை செய்ய பயன்படுகிறது.வெல்லம் இனிப்பு பொருள் என்பதால் இதை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.ஆனால் கோடை காலத்தில் வெல்லம் சாப்பிட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
வெல்லம் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.உடலில் படியும் கழிவுகளை அகற்ற உதவுகிறது.இரத்த சோகை பாதிப்பை குணப்படுத்த உதவுகிறது.மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும் மருந்தாக திகழ்கிறது.ஆனால் அளவிற்கு அதிகமாக வெல்லம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும்.
வெல்லத்தில் இருக்கின்ற கலோரி உடல் எடையை அதிகரித்துவிடும்.அதேபோல் அளவிற்கு அதிகமாக வெல்லம் சாப்பிட்டால் உடலில் சூடு அதிகமாகிவிடும்.உடல் சூடு அதிகமானால் மூக்கில் இரத்தம் வடியும்.கோடை காலத்தில் வெல்லம் சாப்பிட்டால் மன அழுத்தம் அதிகமாகும்.
கோடை காலத்தில் வெல்லத்தை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாகிவிடும்.அளவிற்கு அதிகமாக வெல்லம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.வெல்லத்தில் உள்ள சுக்ரோஸ் மூட்டு பகுதியில் வலி மற்றும் வீக்கத்தை அதிகரிக்கும்.
அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் வெல்லத்தை தவிர்க்க வேண்டும்.வெல்லத்தை அதிகமாக உட்கொண்டால் குடல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.பனி காலத்தில் வெல்லம் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ஆனால் கோடை காலத்தில் வெல்லத்தை அதிகமாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.அதிக உதிரப்போக்கு இருக்கும் பெண்கள் வெல்லம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.எனவே கோடை காலத்தில் அதிக வெல்லம் உட்கொள்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது.