MP MLA க்களை பதவி நீக்கம் செய்ய முடியுமா?? முழு விவரங்கள் இதோ!!

0
100

MP MLA க்களை பதவி நீக்கம் செய்ய முடியுமா?? முழு விவரங்கள் இதோ!!

நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த எம்பி எம்எல்ஏ களை பதவி நீக்கம் செய்வது உச்சநீதிமன்றத்தால் முடியுமா? உயர்நீதிமன்றத்தால் முடியுமா? நாடாளுமன்றத்தால் முடியுமா? அல்லது நம்மால் முடியுமா? என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

முதலில் எம்பி எம்எல்ஏ பதவிகளுக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். நாடாளுமன்றத்தில் மொத்தம் இரண்டு அவை உள்ளது. ஒன்று லோக்சபா இன்று மற்றொன்று ராஜ்யசபா.
இதில் லோக்சபா என்பது மக்களவை ஆகும்.

மக்களவை எம்பியாக பதவி வகிக்க 30 வயது முடிந்தவராக இருக்க வேண்டும், இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், நல்ல மன நிலைமையில் இருப்பவராக இருக்க வேண்டும், அதேபோல் அவர் அரசு ஊழியராக இருக்க கூடாது. அரசிடம் இருந்து எந்த ஊதியமும் பெறாதவராக இருக்க வேண்டும்.

இதே தகுதிகள் தான் ராஜ்யசபாவிற்கும் பொருந்தும் ராஜ்யசபா என்பது மாநிலங்களவை. இதில் பதவி வகிப்பதற்கு வயது மட்டும் குறைந்தபட்சம் 25 முடித்திருந்தாலே போதுமானது. இதே போல தான் எம்எல்ஏ விற்கும் பொருந்தும். வயது குறைந்தபட்சம் 25 முடித்திருந்தாலே போதும்.

எனவே இதுதான் எம்பி மற்றும் எம்எல்ஏ ஆவதற்கு உண்டான தகுதிகள் ஆகும். நாம் ஓட்டு போட்டு எம் பி எம் எல் ஏ வாக இருப்பவர் ஏதேனும் குற்றம் செய்து விட்டால் அவரை பதவி நீக்கம் செய்வதற்கு நமக்கு முழு உரிமை உள்ளது. அது அதற்கு சட்டத்தில் இடமும் உள்ளது.

அதாவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் செக்ஷன் 8 மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆர்டிகள் 102 என்ற இரண்டு சட்டத்தின் கீழ் இது குறித்து முழு விவரங்களையும் கூறியிருக்கிறார்கள். இதில் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆர்டிகள் 102 ல் சில காரணங்களை கூறியிருக்கிறார்கள்.

அதாவது எப்போதெல்லாம் ஒரு எம்பி பதவி நீக்கம் செய்ய முடியும் என்பதற்கான காரணங்களை இதில் கூறியிருக்கிறார்கள் அது என்னவென்று பார்ப்போம்.

அதாவது ஒரு எம்பி ஆனவர் மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ அரசு ஊழியராக பதவி வகிக்க கூடாது அவர் அரசிடம் இருந்து எந்த ஒரு ஊதியமும் பெறக் கூடாது. அவர் நல்ல மனநிலை உடையவராக இருக்க வேண்டும். அவரின் மேல் எந்த ஒரு மோசடி குற்றமோ இருக்கக் கூடாது. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் விருப்பப்பட்டு மற்ற நாட்டின் குடியுரிமையை இவர் வாங்கி இருக்கக் கூடாது.

இங்கே இருந்து கொண்டு மற்ற நாட்டிற்கு விசுவாசமாக அவர் இருக்கக் கூடாது. அதேபோல் ஏதேனும் குற்றத்தில் இவருக்கு தண்டனை கொடுத்து விட்டால் நாடாளுமன்றமே இவரை பதவி நீக்கம் செய்யலாம். இது போன்ற விஷயங்கள் நடக்கும் போது ஒருவர் எம்பி பதவியை இழக்கிறார் என்பதை தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆர்டிக்கல் 102 இன் படி கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் செக்‌ஷன் 8 டில் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

அதாவது எம் பி யாக பதவி வகிப்பவருக்கு ஏதேனும் ஒரு புகாரின் பேரில் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் அல்லது இரண்டிற்கும் மேல் சில ஆண்டுகள் தண்டனை வழங்கி விட்டது என்றால் அவர்கள் தங்களது எம்பி பதவியை இழந்து விடுவார்கள். மேலும் சிறை தண்டனைக்கு பிறகு அவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு எந்த ஒரு தேர்தலிலும் நிற்க முடியாது இன்று இந்த மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி கூறப்படுகிறது.

இந்த மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வருகிறார்கள். அதாவது நீதிமன்றம் ஒருவருக்கு தண்டனை வழங்கி விட்டது என்றால் அந்த தண்டனையை அவர் மேல்முறையீடு செய்வதற்கு 90 நாட்கள் வாய்ப்பு வழங்குவார்கள். எனவே அந்த நாட்களில் இவரின் தண்டனை நிறுத்தி வைக்கப்படும். எனவே அந்த நேரத்தில் அவரின் எம்பி பதவியை நீக்க முடியாது என்று ஒரு திருத்தம் கொண்டு வந்தார்கள்.

ஆனால் இது செல்லாது என்று 2013ஆம் ஆண்டு நடந்த ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு வழக்கில் ஒருவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு அது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்போது அவரின் எம்பி மற்றும் எம்எல்ஏ பதவியை நீக்கம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Previous articleஇந்தியன் வங்கியில் வேலை செய்ய விரும்புகிறீர்களா? இது உங்களுக்கான வேலை வாய்ப்பு!!
Next articleமாதம் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!