உடலில் எந்த ஒருநோய் பாதிப்பு ஏற்பட்டாலும் அதை குணப்படுத்தும் மருந்துகளில் ஒன்றாக உணவு இருக்கின்றது.அதேபோல் சிலவகை உணவுகள் நோய் பாதிப்புகளை அதிகரிக்கிறது.சில நோய் பாதிப்புகளுக்கு உணவுக்கட்டுப்பாடு அவசியமான ஒன்றாக இருக்கிறது.
குறிப்பாக சர்க்கரை நோய் இருப்பவர்கள் தங்கள் உணவில் கடுமையான கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.சிலவகை உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த உணவு சாப்பிட வேண்டும் எந்த உணவை தவிர்க்க வேண்டும் என்பது தெரியாமல் இருக்கிறது.
சர்க்கரை நோய் ஏறுபவர்கள் பால் பொருட்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.குறிப்பாக தயிரில் இருந்து கிடைக்கும் மோரை குடித்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.நாம் சாப்பிடும் நூறு மில்லி மோரில் கிட்டத்தட்ட 5 கிராம் கார்போஹைட்ரேட்,3 கிராம் புரதம்,3 கிராம் கொழுப்பு,62 கலோரிகள் நிறைந்து காணப்படுகிறது.
இந்த மோரில் ஊறவைத்த வெந்தயத்தை போட்டு குடித்தால் சர்க்கரை அளவு சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டிற்கு வரும்.சர்க்கரை மட்டுமல்ல இரத்த அழுத்தம்,கொலஸ்ட்ரால் பிரச்சனையும் மோர் குடிப்பதன் மூலம் சரியாகும்.மோர் குடித்தால் உடல் சூடு தணியும்.மோர் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.
சர்க்கரை நோயாளிகள் கொழுப்பு குறைவாக இருக்கின்ற தயிரில் இருந்து மோர் தயாரித்து குடிக்கலாம்.மோர் குடித்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.மோர் குடித்தால் குடல் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.தயிரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மோரில் தண்ணீர் மட்டும் கலந்து பருகுங்கள்.
இதில் உப்பு போன்ற எந்தஒரு சுவையையும் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.மோரில் உப்பு கலந்து குடித்தால் இரத்த கொதிப்பு,இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.அதேபோல் சிலர் மோரில் இனிப்பு சுவை கலந்து குடிக்கும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.