இக்காலத்தில் உணவமுறை பழக்கம் ஆரோக்கியமாக இல்லை என்றால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.தற்பொழுது பெரும்பாலானோர் தவறான உணவுப் பழக்கங்களையே பின்பற்றி வருகின்றனர்.இதன் காரணமாக இளம் வயதிலேயே நீரிழிவு நோய் பாதிப்பிற்கு ஆளாக நேரிடுகிறது.
நீரிழிவு நோய்க்கான காரணங்கள்:-
*பரம்பரைத் தன்மை
*இனிப்பு உணவுகள்
*மோமான உணவுப் பழக்கவழக்கம்
*உடல் பருமன்
*வயது முதுமை
நீரிழிவு நோய் அறிகுறிகள்:
*திடீர் உடல் எடை குறைவு
*கண் பார்வை குறைபாடு
*அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு
*தண்ணீர் தாகம் எடுத்தல்
*அதிக உடல் சோர்வு
நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சேர்த்த டீ குடிக்கலாமா?
கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் பொருளான வெல்லம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்க கூடியவையாக உள்ளது. ஆரோக்கிய நன்மையை கருதி பலரும் சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்துகின்றனர்.
நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்கள் டீயில் வெல்லம் சேர்த்து பருகலாமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. வெல்லத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு, மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் ஏராளமாக நிறைந்திருக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் இனிப்பு உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.இருப்பினும் இனிப்பு உட்கொள்வதை நிரந்தரமாக தவிர்க்க முடியாதவர்கள் சிறிதளவு அதை எடுத்துக் கொள்கின்றனர்,
சிலர் இரத்த சர்க்கரை அதிகரித்துவிடும் என்று அஞ்சி சர்க்கரை சேர்க்காத டீ பருகுகின்றனர். இனிப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் அதே சமயம் இரத்த சர்க்கரை உயரக் கூடாது என்று நினைப்பவர்கள் தேநீரில் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். வெல்லம் சேர்த்த தேநீர் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது.
இருப்பினும் தேநீரில் குறைவான அளவு மட்டுமே வெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.வெல்லம் சேர்த்த பானம் அருந்த விரும்புபவர்கள் நிச்சயம் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.