சுகர் பேஷண்ட்ஸ் ஸ்வீட் சாப்பிடலாமா? மருத்துவ நிபுணர்களின் பரிந்துரை என்ன?

Photo of author

By Gayathri

நாம் அனைவரும் விரும்பி உண்ணும் அசைவ உணவுகளில் முதல் இடத்தில் இருப்பது இனிப்பு தான்.லட்டு,ஜிலேபி,மைசூர் பாக்,ஜாங்கிரி,ஹல்வா,பால்கோவா என்று லட்சக்கணக்கான இனிப்பு வகைகள் இருக்கின்றது.

சுப நிகழ்ச்சி மற்றும் பண்டிகை காலங்களில் தவிர்க்க முடியாத ஒரு உணவுப் பொருள் இனிப்பு.குழந்தைகள் மட்டுமின்றி வயதானவர்களும் இனிப்பு என்றால் குழந்தையாகிவிடுகிறார்கள்.ஆனால் இன்றைய காலத்தில் இனிப்பு உணவுகள் உடலில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.காரணம் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருக்கிறது.இதனால் இனிப்பு உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு கெட்டதாக மாறிவருகிறது.

சர்க்கரை நோய் இருந்தாலும் ஆசை யாரை விட்டு வைக்கிறது.இனிப்பய் கண்டால் சர்க்கரை நோய் கண்ணுக்கு தெரியாது.சிலர் ஒரு நாள் தான் சாப்பிடுகிறோம்.ஒன்றும் ஆகிவிடாது என்று இனிப்பை அள்ளி வாயில் திணிப்பார்கள்.இதனால் சுகர் லெவல் ஜெட் வேகத்தில் எகிறி அவஸ்தையை சந்திக்க நேரிடுகிறது.இதனால் இனிப்பு சாப்பிடவே கூடாதா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

மருத்துவ நிபுணர்கள் யாராக இருந்தாலும் குறைந்த அளவு இனிப்புகளையே எடுத்துக் கொள்ள வேண்டும்.குறைந்த இனிப்புகளால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது.அதிகளவு இனிப்பு சாப்பிட்டால் மட்டுமே இரத்த சர்க்கரை அளவு உயரும்.

இனிப்பு பானங்கள் மற்றும் பழச்சாற்றுகளை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.பானங்களில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை விரைவில் அதிகரித்துவிடும்.குறைவான இனிப்பு தான் என்று வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.அவ்வாறு சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு கிடுகிடுன்னு உயர்ந்துவிடும்.அதேபோல் இரவு நேரங்களில் இனிப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இரவு நேரத்தில் இனிப்பு சாப்பிடும் சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும்.எனவே காலை அல்லது மதிய உணவிற்கு பிறகு சிறிதளவு இனிப்பு எடுத்துக் கொள்ளலாம்.