விண்வெளியில் இப்படி செய்வதால் நடக்க முடியும் ??..ஆச்சரியமாக இருக்கே!!.

0
119

 

 

 

விண்வெளியில் இப்படி செய்வதால் நடக்க முடியும் ??..ஆச்சரியமாக இருக்கே!!.

 

விண்வெளியில் ஒருவர் நடப்பது என்பது மிகவும் வித்தியாசமானது. விண்வெளி வீரர்கள் பல ஆபத்துக்களை எதிர்நோக்கி தான் இந்த நடையில் இறங்குவார்கள். விண்கலத்திலிருந்து வெளியே வந்துதான் விண்வெளி வீரர் நடையை மேற்கொள்கிறார். Extra Vehicular Activity (EVA) செயல்பாடு என்று அழைக்கப்படுகிறது.

விண்வெளி நடையை மேற்கொள்வதற்கு முன்பு விண்வெளி வீரர்கள் பல மணி நேரம் பயிற்சியை மேற்கொள்வார்கள். விண்வெளி நிலையத்திலிருந்து எந்த வழியே செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்.விண்வெளி நடையின்போது விண்வெளி வீரர்களின் உடல் கயிறு மூலம் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். கயிறு இணைக்காமலும் விண்வெளி நடை மேற்கொள்ளப்படும். விண்வெளி நடையின்போது கருவிகள் கைதவறி விழுந்தால் விண்வெளி வீரர்கள் மிதந்து சென்று கருவிகளை எடுத்துவிட முடியும். கயிறு கட்டியிருப்பதால் மிதப்பது எளிது.கயிறு கட்டாமல் விண்வெளி நடையில் இலக்கை விட்டுத் தவறினால், அவர்களது உடையில் இணைக்கப்பட்டிருக்கும் சிறிய ஜெட் பேக், அவர்களை விண்வெளி நிலையத்துக்குப் பாதுகாப்பாக அழைத்து சென்றுவிடும்.

 

விண்வெளி நிலையத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்வதற்கோ புதிய கருவிகளைப் பொருத்துவதற்கோ பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வதற்கோ விண்வெளி நடையை மேற்கொள்கிறார்கள்.வேலையின் தன்மையைப் பொறுத்து விண்வெளி நடை பொதுவாக 5 முதல் 8 மணி நேரம் வரை மேற்கொள்ளப்படுகிறது. பூமியில் இருந்து கொண்டுவந்த கருவிகளைப் பொருத்துவதுதான் இந்த விண்வெளி நடையின் பிரதான நோக்கம்.

 

விண்வெளி நடை மிகவும் சவாலானது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. தண்ணீருக்கு அடியில் இருப்பதுபோல் விண்வெளி உடை வடிவமைக்கப்பட்டிருக்கும். விண்வெளிக்கு செல்வதற்கு முன் விண்வெளி வீரர்கள் தண்ணீருக்கு அடியில் நடந்து பயிற்சி எடுப்பார்கள்.நீருக்கு அடியில் பயிற்சி எடுத்திருந்தாலும் விண்வெளியில் நடப்பது அவ்வளவு எளிதல்ல. விண்வெளி வீரர்கள் தங்கள் பாதங்களில் ஒரு தட்டை இணைத்து சிரமத்தை குறைத்துக் கொள்கிறார்கள்.

 

விண்வெளி உடையில் இணைக்கப்பட்டிருக்கும் மற்றும் குளிர்ச்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் திரவம், அங்குள்ள காலநிலை மாற்றத்தால் மிக வெப்பமாகவோ, குளிராகவோ மாறிவிடும். விண்வெளி நிலையத்தில் சூரியக் கதிர்கள் நேரடியாக விழும். இதனையும் சமாளிக்க வேண்டும். விண்வெளியில் சுற்றி வரும் பொருட்கள் மற்றும் எரிகற்கள் போன்றவை தாக்காதவாறு விண்வெளி வீரர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.நாம் பூமியில் ஆக்சிஜனை மட்டும் சுவாசிப்பதில்லை. நைட்ரஜனையும் சேர்த்து உள்ளே இழுக்கிறோம். ஆக்சிஜனைத் தவிர பிற வாயுக்கள் கழிவாக வெளியேறி விடுகின்றன. ஆனால், விண்வெளியில் ஆக்சிஜனை மட்டுமே சுவாசிக்க வேண்டிய சூழல் இருக்கும். அதனால் உடலில் உள்ள நைட்ரஜன் விண்வெளி நடையின்போது குமிழ்களாக உடலில் தோன்றும். இதனால் தோள்பட்டை மற்றும் முட்டி போன்ற இடங்களில் அதிக வலி உண்டாகும்.

 

author avatar
Parthipan K