ஒரே வாரத்தில் தைராய்டு குறையனுமா? கட்டாயம் இந்த ஒரு டீ போதும்!
பெண்கள் பலருக்கு தைராய்டு, தைராய்டு தலைவலி வெள்ளைப்படுதல், ஹீமோகுளோபின் குறைவு, போன்ற பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. அவற்றுக்கெல்லாம் அருமருந்தாக இந்த ஒரு டீ குடித்தாலே போதும். இதற்கு முக்கிய பொருள் செம்பருத்தி தான். செம்பருத்தியில் பல வகைகள் உள்ளது.
அதில் நாட்டு செம்பருத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த செம்பருத்தியில் உள்ள மகரந்தம் மற்றும் கீழ் உள்ள காம்புகளை அகற்றி விட வேண்டும். செம்பருத்தி இதழ்களை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். பின்பு தனியாக ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் இந்த செம்பருத்தி இதழ்களை போட வேண்டும்.
பின்பு அத்துடன் சிறு துண்டு இஞ்சியை தட்டி போட வேண்டும். நன்கு கொதித்து அடர் சிவப்பு நிறம் வரும் பொழுது அடுப்பை அணைத்து விட வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு வெல்லம் சேர்த்து பாகு எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் நன்றாக கலந்து சிறிதளவு எலுமிச்சை மற்றும் பெப்பர் சேர்த்து கொள்ள வேண்டும். தினந்தோறும் இந்த டீ யை அருந்தி வந்தால் பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகள் குறைந்துவிடும்.