டாட்டூ போடப் போறீங்களா? கட்டாயம் இதையும் தெரிஞ்சுக்கோங்க!

0
108
Are you going to get a tattoo? Must know this too!
Are you going to get a tattoo? Must know this too!

டாட்டூ போடப் போறீங்களா? கட்டாயம் இதையும் தெரிஞ்சுக்கோங்க!

தற்போதைய உலகில் டேட்டூ என்பது பேஷனாக உள்ளது. ஆண் பெண் என அனைவரும் டாட்டூ குத்திக் கொள்கின்றனர். இவ்வாறு குத்திக் கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு சிலர் தலை கை உடல் முழுவதும் டாட்டோ குத்திக் கொள்கின்றனர். இவ்வாறு  டாட்டூ குத்தி கொள்வதில் பல வகைகள் வந்துவிட்டது. காலப்போக்கில் இதனால் பல்வேறு பிரச்சனைகளும் உண்டாகிறது.

அந்த பிரச்சனைகள் பெரும்பான்மையாக யாருக்கும் தெரிவதில்லை. முன்பாவது பச்சை குத்துவது என்பது பாரம்பரியமான முறையில் நடத்தி வந்தனர். தற்பொழுது அதனை மிகைப்படுத்தும் அளவிற்கு உலக அளவான கலர் மைகளில் டாட்டோ குத்துவது இயல்பாகிவிட்டது. அந்த வகையில் கருப்பு மையினால் வரையப்படும் டாட்டூவை சுலபமாக வேண்டாம் என்றால் அழித்துக் கொள்ளலாம். அதுவே வண்ண மைகளால் போடப்படும் டாட்டூவை அழிப்பது மிகவும் கடினம்.

அவ்வாறு வரையப்படும் வண்ண மை டாட்டூவை அழிக்க நினைத்தால் மீண்டும் உங்களின் தோல் பழைய நிலைமைக்கு திரும்புவது கடினம். அதேபோல டாட்டூ குத்தி கொள்வதால் காலப்போக்கில் சர்ம கோளாறுகள் ஏற்படும். டாட்டூ குத்துவதற்கு உபயோகிக்கும் அந்த ஊசிகளில் உள்ள பாக்டீரியாவால் தோல் வீக்கம் கூடுதல் வலி போன்றவை உருவாகிறது.

மிகவும் முக்கியமான ஒன்று டாட்டூ போட்டுக் கொள்வார்கள் அதனின் பாதுகாப்பையும் உணர வேண்டும். ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் எச்ஐவி போன்ற தொற்று வரக்கூடும். வண்ண சாயங்கல் போடப்படும் டாட்டூக்களால் உடலுக்கு தேவையற்ற தொற்று ஏற்படும். டாட்டூ குத்தியவர்கள் ஒரு வாரத்திற்கு இரத்த தானம் செய்ய கூடாது.