ADMK DMK TVK: பன்னீர் செல்வத்திடம் திமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறுமா என்பது குறித்து கேள்வி கேட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ரஜினி திருவள்ளூர் வெள்ளி விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சமீபத்தில் அதிமுக பன்னீர்செல்வம் ரஜினியின் வீட்டிற்கு சென்று நேரடியாக சந்தித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம், மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் இது என்று கூறினாலும், அவரின் உடன் இருப்பவர்களிடம் ரஜினியுடன் பேசியதை பகிர்ந்துள்ளாரம்.
அதாவது திமுக வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுமா? தற்போது அதிமுக பாஜக இடையே உள்ள மோதல் எந்த நிலையில் உள்ளது? விஜய்யின் அரசியல் வருகை யாரையெல்லாம் பாதிக்கும் என்றெல்லாம் கேள்வி கேட்டதாக கூறியுள்ளார். ரஜினி மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.
அந்த வகையில் பன்னீர்செல்வம் பாஜகவுடன் இணைய அதிக வாய்ப்புள்ளதால் இவரை அழைத்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய உள்ளாராம். மேற்கொண்டு திருவள்ளுவர் வெள்ளி விழா குறித்து ரஜினிக்கு தமிழக அரசு சார்பாக அழைப்பு விடுத்துள்ளனர். அதாவது அவர் மற்றும் அவரது மகள் இருவருக்கும் விமான டிக்கெட் புக் செய்துள்ளனர்.
இறுதிவரை இவர்கள் வருவார்கள் என்று அமைச்சர்கள் மத்தியில் பெருமளவில் எதிர்பார்க்கவும் பட்டதாம். ஆனால் இவர்கள் எதிர்பார்த்த அனைத்தும் வீணாகும் நிலைதான் உண்டானது. இறுதி நிமிடத்தில் தங்களது தவிர்க்க முடியாத காரணத்தினால் வர முடியவில்லை என ரஜினி சார்பாக கூறிவிட்டார்களாம். ஆனால் இந்த பதிலை முன்னதாகவே எதிர்பார்த்தது போல் ஸ்டாலின் இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் சரி என்று சொல்லிவிட்டதாக தலைமை வட்டாரம் கூறுகிறது.
ரஜினி திருவள்ளுவர் வெள்ளி விழாவில் கலந்து கொள்ளாததற்கு பாஜக காரணமாக இருக்கலாம், அதனால் தான் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.