கேன் குடிநீரை நம்பியிருக்கும் சென்னை மக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!
சென்னையில் வாழும் 90 சதவீத மக்களுக்கு குடிநீர் பயன்பாட்டுக்கு உதவுவது கேன் குடிநீர் என்பது தெரிந்ததே. கேன் குடிநீர் வீடுகளில் மட்டுமின்றி ஹோட்டல்களிலும் டீ கடைகளிலும் கூட உபயோகப்படுத்தப்படுகிறாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கேன் குடிநீர் சங்கங்களின் கூட்டமைப்பு திடீரென காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் இன்று மாலை 6 மணி முதலே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்
அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் குடிநீர் சங்கங்கள் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கேன் குடிநீர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த போராட்டம் ஒரு சில நாட்கள் நீடித்தால் சென்னை மக்கள் குடிநீருக்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உடனடியாக இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி கேன்குடிநீர் சங்கங்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்