கொளுத்தும் வெயில் காலத்தில் ஜில்லு வாட்டர் குடிக்கலாமா? குடித்தால் என்னாகும் தெரியுமா?

Photo of author

By Divya

கொளுத்தும் வெயில் காலத்தில் ஜில்லு வாட்டர் குடிக்கலாமா? குடித்தால் என்னாகும் தெரியுமா?

Divya

வெயில் காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள குளிர்ந்த தண்ணீர்,கூல்ரிங்ஸ் போன்றவை குடிக்க பலரும் விரும்புகின்றனர்.குளிர்ந்த பொருட்கள் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் என்று பலரும் நினைக்கின்றனர்.ஆனால் குளிர்ந்த நீர் அதாவது பிரிட்ஜ் தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு பிரச்சனை உண்டாக்கிவிடும்.

ஐஸ் வாட்டர் குடிப்பதால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

பிரிட்ஜ் வாட்டர்:

1)நாம் பிரிட்ஜ் வாட்டர் குடித்தால் உடல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும்.குளிர்ந்த நீர் உடலில் வெப்பநிலையை குறைத்து உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கும்.

2)பிரிட்ஜ் தண்ணீர் குடித்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.குளிர்ந்த நீர் மலச்சிக்கல் பாதிப்பை உண்டாக்கும்.

3)ஐஸ் வாட்டர் குடித்தால் கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

4)பற்சிதைவு,பல் கூச்சம் போன்ற பிரச்சனைகள் ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படுகிறது.ஐஸ் வாட்டர் குடித்தால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.குளிர்ந்த நீர் மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும்.

5)சிலருக்கு ஐஸ் வாட்டர் அலர்ஜியை உண்டாக்கிவிடும்.ஐஸ் வாட்டர் குடித்தால் வயிறு பிரச்சனைகள,வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

எனவே கோடை காலமாக இருந்தாலும் ஐஸ்வட்டர் குடிப்பதை தவிர்த்துவிட்டு மண் பானையில் தண்ணீர் ஊற்றி பயன்படுத்துவதுதான் சிறந்தது.மண் பானை நீர் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.மண் பானை நீர் குடிப்பதால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும்.