செல்போன் வேண்டாம் என்று நம்மால் கூற முடியுமா!! அப்படி கூறும் திரை பிரபலங்கள்!!

Photo of author

By Gayathri

இன்றைய நவீன காலத்தில் உலகில் பெரும்பாலான மக்கள் முதல் சிறு குழந்தைகள் வரையில் அனைவரிடத்திலும் இந்த செல்போன் ஆனது தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளது.

மக்களின் வசதிக்கேற்றவாறு இந்த செல்போன்களின் விலைகளில் மாற்றம் ஏற்படலாமே தவிர செல் போன் வைத்திருப்பதில் எந்தவித மாற்றமும் இன்றி அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உலகம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கையில் பிரபலமான திரை துறை நட்சத்திரங்கள் சிலர் செல்போன் பயன்படுத்துதலை தன் வாழ்வில் இருந்து முற்றிலுமாக துறந்துள்ளனர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

அப்படிப்பட்ட உலகின் பிரபலமான கலைஞர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களைப் பற்றியும் ஏன் அவர்கள் செல்போன் பயன்படுத்தவில்லை என்பதை பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகை சாரா ஜெசிகா பார்க்கர் :-

செல்போன் பயன்படுத்துவதால் கவன சிதறல் ஏற்படுவதாகவும், அதனால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளதால் செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் ஆக நிறுத்திக் கொண்டு விட்டேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார். பிரபல நடிகையின் கையில் செல்போன் இல்லை என்பது உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹாலிவுட் சினிமாவில் முன்னணி இசைக் கலைஞராக வலம் வருபவர் சைமன் கோவல் :-

செல்போன் பயன்படுத்துவது குறித்து தனக்கு ஆர்வம் இல்லாததாலும், இதனால் தனக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்ற காரணத்தாலும் செல்போன் பயன்படுத்துவதை விட்டுவிட்டேன் என்று இவர் தெரிவித்திருக்கிறார்.

Batman Returns, Catch Me If You Can போன்ற படங்களை இயக்கி ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் வால்கன் :-

செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் மீது தனக்கு பெரிதளவும் நாட்டமில்லாத காரணத்தால் இன்று வரை நான் இவற்றை பயன்படுத்தவில்லை என்று இவர் தெரிவித்திருக்கிறார்.

ஹாலிவுட் சினிமாவின் உச்சப்பட்ட நடிகராக வலம் வருபவர் டாம் க்ரூஸ் :-

உலகம் முழுவதும் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவர் இதுவரையில் செல்போனை பயன்படுத்தியதே இல்லை என்ற தகவல் வெளியாகி இவருடைய ரசிகர்களை ஆச்சரியம் அடைய செய்துள்ளது.

பிரபல பாப் பாடகர் ஜூஸ்டின் பீபர் :-

இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டுள்ளார். இவருக்கு இசையின் மீது அதிக ஆர்வம் உள்ளதால் செல்போனை பயன்படுத்த தனக்கு தோன்றவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு மிக உயர்ந்த நிலையில் இருக்கும் இவர்கள் செல்போன்களை தாங்கள் பயன்படுத்துவதில்லை என்று கூறும் விஷயம் அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.