மாத்திரை சாப்பிடும்போது வெண்ணீர் பயன்படுத்தலாமா!! இதோ உங்களுக்காக!!
மாத்திரை சாப்பிடும் பொழுது வெந்நீரை பயன்படுத்தலாமா அல்லது மாத்திரை எந்த முறையில் சாப்பிட்டால் நன்மையை தரும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். பொதுவாக நாம் ஒவ்வொரு பொருளையும் உட்கொள்ளும் போது அதனுடைய தன்மையை அறிந்து எடுத்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் அவை நம் உயிருக்கு ஆபத்து உண்டாக்கக்கூடிய வகையில் அமையும்.
அந்த வகையில் நம் உடல் நலக் கோளாறுகளை தீர்க்கும் மாத்திரைகளை தவறான முறையில் சாப்பிட்டு வரோம். இவ்வாறு சாப்பிட்டு வருவதால் மேலும் பல ஆபத்துக்கள் நம்மை நோக்கி தொடர்ந்து வரும். மாத்திரைகளை சுடுநீர் வைத்து சாப்பிடலாமா அல்லது குளிர்ந்த நீரில் சாப்பிடலாமா என்பதை பற்றியும், சரியான நீரை பயன்படுத்தவில்லை என்றால் எப்படிப்பட்ட அபாயங்கள் உங்களுக்கு உண்டாகும் என்பதை பற்றியும் மேலும் விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக நாம் உட்கொள்ளும் மருந்துகளை மற்ற உறுப்புகளுக்கு எடுத்துச் செல்ல உதவியாக இருப்பவை தான் இந்த திரவப் பொருட்கள். அதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மாத்திரைகளில் பல வகை உண்டு அவற்றின் தன்மைக்கு ஏற்ப சரியான தட்பவெப்பம் கொண்ட நீரை பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு கேப்சூல் மாத்திரைகள், வீரியம் அதிகம் கொண்ட மாத்திரைகள், சாதாரண காய்ச்சல் மாத்திரைகள் இவ்வாறு பலவகை மாத்திரைகள் இன்றைய சூழ்நிலையில் இருக்கின்றது. இதை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தட்பவெப்ப நிலை கொண்ட நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக வைட்டமின் D, கால்சியம் போன்ற மாத்திரைகளை பாலை பயன்படுத்தி நாம் குடித்து வரலாம். அதனால் எந்த தவறுகளும் இல்லை. இது எல்லா வகையான மாத்திரைகளுக்கும் உகந்தது அல்ல.
கேப்சூல் வகை மாத்திரைகளுக்கு வெண்ணீர் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது நாக்கில் இருந்து தொண்டையைத் தாண்டி போகும் பொழுது ஒட்டிக் கொள்ளும் தன்மை அதிகம் உண்டு அதனால் சுடுநீரில் எளிமையாக ஒட்டிக் கொள்ளும் தன்மை அவற்றிற்கு உண்டு என்பதால் வாந்தி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த காரணத்தினால் இதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
காய்ச்சல் மற்றும் பாரசிட்டமல் இந்த வகையான மாத்திரைகளை வெதுவெதுப்பான கொண்டு குடிப்பது நன்மையை கொடுக்கும். ஏனென்றால் தொண்டையில் வலி, இருமல், தலையினால் தொண்டை கரகரப்பாக இருப்பது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் வெதுவெதுப்பான நீரை மாத்திரையுடன் சேர்த்து குடிக்கும் பொழுது உங்களுக்கு நன்மையாகவும் இதமாகவும் இருக்கும்.
சிலர் மாத்திரைகளை சாக்லேட் போன்று மென்று சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். அந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்துவது நல்லது. இவ்வாறு சாப்பிடும் பொழுது முழு மாத்திரையும் உடலுக்குள் செல்லாது. பற்களில் மாட்டிக்கொள்ளும் தன்மை உண்டாகும். இதன் மூலமாக மாத்திரைகள் வீணாகுவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் நோய் தீர்ப்பதற்கு பயனுள்ளதா இல்லாமல் போய்விடும். மாதிரி சாப்பிடும் பொழுது போது போதுமான அளவு தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். அவ்வாறு குழிக்காவிட்டால் அஜீரண கோளாறுகள் ஏற்பட்டு மாத்திரை அதனுடைய வேலையை முழுமையாக செய்யாமல் போகும்.
அடுத்தபடியாக சாப்பிட்ட உடனே மாத்திரை போடும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. அதனை கை விடுவது நல்லது. உணவுக்கு முன் சாப்பிட வேண்டிய மாத்திரையை உணவு உண்பதற்கு 15 நிமிடத்திற்கு முன்னாடியே சாப்பிட வேண்டும். உணவுக்குப் பின் சாப்பிட வேண்டிய மாத்திரையை உணவு உண்டு 15 நிமிடம் கழித்து சாப்பிட வேண்டும். ஏனென்றால் உணவுடனே மாத்திரையை சாப்பிடும் பொழுது மாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்காது.