கர்ப்பம் தரித்தல் என்பது எல்லா பெண்களுக்கு இருக்கும் பெரிய கனவாகும்.திருமணமான பெண்கள் தங்கள் கர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.பெண்கள் கர்ப்பம் தரித்த பின்னர் மற்றும் குழந்தை பெற்ற பின்னர் உடல் சார்ந்து பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.
பிரசவித்த பெண்களுக்கு முடி உதிர்தல்,தொப்பை போடுதல்,உடல் எடை அதிகரித்தல்,மன அழுத்தம் உண்டதால் போன்றபிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர்.பிரசவ காலத்திற்கு பிறகு பெண்களுக்கு இடுப்பு வலி பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
பெண்கள் குழந்தை பெற்ற பின்னர் பத்திய உணவு சாப்பிடுவதில் இருந்து பல விஷயங்களை பாலோ செய்து வருகின்றனர்.குழந்தை பெற்ற பிறகு தாய்ப்பால் கொடுப்பதில் இருந்து குழந்தை பராமரிப்பு வரையிலான பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
இப்படி எல்லா விஷயங்களிலும் அக்கறை காட்டும் பெண்கள் தங்கள் உடல் மீது அக்கறை செலுத்துவதில்லை.இதனால் உடலளவில் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.இன்று பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.
இதனால் பிரசவத்திற்கு பிறகு தொப்பை ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இந்த தொப்பை குறைக்க மருத்துவர் பெல்ட் பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர்.பெல்ட் அணிவதால் வயிற்று தசைகள் இயல்பு நிலைக்கு வரும்.வயிறு மற்றும் இடுப்பு பகுதிக்கு இடையே உள்ள தசைகள் வலுப்படும்.இதனால் தொப்பை வராமல் இருக்கும்.
பெல்ட் அணிந்தாலும் எளிதான உடற்பயிற்சி செய்ய வேண்டியது முக்கியம்.சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றவர்கள் மற்றும் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்கள் என்று எப்படி குழந்தை பெற்றிருந்தாலும் நீங்கள் பெல்ட் பயன்படுத்துவதற்கு முன் நிச்சயம் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.
சிலர் பிரசவ தொப்பையை குறைக்க லிபோசெஷன் செய்கின்றனர்.பெல்ட் அணிதல்,கொழுப்பு அகற்றும் சிகிச்சை செய்தல் போன்றவை அவரவர் விருப்பம்.நீங்கள் எதை செய்வதாக இருந்தாலும் முதலில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.