உணவில் சேர்க்கப்படும் மஞ்சள் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற வேதிப்பொருள் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
சளி,இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு மஞ்சள் ஒரு சிறந்த மூலிகையாக விளங்குகிறது.இந்த மஞ்சளை பாலில் கலந்து குடித்தால் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.மஞ்சளில் உள்ள குர்குமின் மட்டுமின்றி அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கிறது.இது இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மஞ்சள் உடலில் ஏற்படும் நோய் தொற்றுகளுக்கு எதிராக போராடும் திறன் கொண்டது.இந்த மஞ்சளை பாலில் கலந்து குடிக்கும் போது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.மூட்டு வலி,தசை வலி பிரச்சனை இருப்பவர்கள் மஞ்சள் பாலை தினமும் குடித்து வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.
தினமும் மஞ்சள் பாலை குடிப்பதால் மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.வளரும் குழந்தைகளுக்கு மஞ்சள் பால் ஒரு ஊட்டச்சத்து பானமாக திகழ்கிறது.மாரடைப்பு,பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய் பாதிப்புகள் வராமல் இருக்க மஞ்சள் கலந்த பாலை தினமும் குடிக்கலாம்.
பாலில் மஞ்சள் மட்டும் சேர்க்காமல் அதனுடன் மிளகுத் தூள்,பட்டை தூள் சேர்த்து குடித்தால் உடலில் நோய் அபாயம் குறையும்.மஞ்சள் பாலை தொடர்ந்து குடித்து வந்தால் மன ஆரோக்கியம் மேம்படும்.மஞ்சள் கலந்த பாலை குடிப்பதன் மூலம் நினைவாற்றல் மேம்படும்.அனைத்து வித சரும பிரச்சனைகளுக்கும் மஞ்சள் பால் தீர்வாக இருக்கிறது.