உயிரை பறிக்கும் புற்றுநோயை கூட நம்ம ஊரு பழையசோறு குணமாக்கும் என்றால் நம்ப முடிகிறதா?

Photo of author

By Divya

உயிரை பறிக்கும் புற்றுநோயை கூட நம்ம ஊரு பழையசோறு குணமாக்கும் என்றால் நம்ப முடிகிறதா?

அன்று பழையசோறு என்றால் கேவலமாக நினைத்த மக்கள் தான் இன்று அதை 5 ஸ்டார் ஹோட்டலில் அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடுகின்றனர்.இதன் பேரு தான் பழைய சோறு ஆனால் இதனால் கிடைக்கும் பலன்களை அறிந்தால் மலைத்து போய்விடுவீர்கள்.

பெரும்பாலானோர் வீடுகளில் காலை நேரம் அல்லது மதிய நேர உணவு பழைய சோறு தான்.மீதமான சாதத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊறவைத்து குடித்தால் அவ்வளவு அருமையாக இருக்கும்.

சாதம் நன்கு நொதித்த தண்ணீரை அருந்தினால் குடல் புண்,அல்சர்,வாய்ப்புண்,குடல் எரிச்சல்,வாயுத் தொல்லை,உடல் சூடு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

பழைய சோறு என்பது நம் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக உள்ளது.இதில் தயிர் சேர்த்து குடிப்பது,வெங்காயம் நறுக்கி போட்டு குடிப்பது என்பது அவரர் விருப்பத்திற்கேற்ப செய்து அருந்தி வருகின்றனர்.

நன்கு நொதித்த பழைய சோற்றில் அதிகளவு வேதிப்பொருட்கள் உருவாகி இருக்கும்.இதை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவது முழுமையாக தடுக்கப்படும்.

பழைய சோறு செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.இதை காலை நேரத்தில் குடித்து வந்தால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.