இன்று பெரும்பாலானவர்கள் உலர் விதைகள் சாப்பிடும் நல்ல பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.குறிப்பாக பாதாம் பருப்பு அனைவரும் விரும்பி உட்கொள்ளும் உலர் விதையாக இருக்கிறது.தினமும் ஊறவைத்த பாதாம்,வெறும் பாதாம் என்று ஏதேனும் ஒரு விதத்தில் பாதாமை சாப்பிடுகின்றோம்.பாதாமில் இரும்பு,புரதம்,கால்சியம்,பாஸ்பரஸ்,மெக்னீசியம்,வைட்டமின் ஏ,வைட்டமின் ஈ போன்ற முக்கியமான ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
பாதாம் நன்மைகள்:
1)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பாதாம் பருப்பு உதவுகிறது.ஊறவைத்த பாதாம் சாப்பிட்டால் மூளை புத்துணர்வு பெறும்.
2)சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாக பாதாம் பருப்பை உட்கொள்ளலாம்.பாதாம் பருப்பு சாப்பிட்டால் இதயம் சம்மந்தபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
3)உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் கிடைக்க பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடலாம்.எலும்பு வலிமையை அதிகப்படுத்த பாதாம் பருப்பை உட்கொள்ளலாம்.
பாதாம் பருப்பு இத்தனை நன்மைகளை கொண்டிருந்தாலும் இவை விலை அதிகமாக இருப்பதால் பலர் வாங்கி சாப்பிட தயங்குகின்றனர்.விலையும் குறைவாக இருக்க வேண்டும் அதே சமயம் பாதாமில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்களை பெற வேண்டுமென்று நினைத்தால் நீங்கள் வேர்க்கடலையை உட்கொள்ளலாம்.
இதிலும் பாதாமில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.முட்டை,பாதாம்,இறைச்சியைவிட நிலக்கடையில் அதிக புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது.நிலைக்கடலை உட்கொண்டால் மூளையின் செயல்திறன் மேம்படும்.வேர்க்கடலை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.எனவே பாதாம் பருப்பிற்கு நிகரான சத்துக்களை பெற வேர்க்கடலை உட்கொள்ளலாம்.