உங்கள் கால் விரல் நகம் உடல் நிலையை புட்டு புட்டு வைக்கும் என்றால் நம்ப முடிகிறதா?

Photo of author

By Divya

உங்கள் கால் விரல் நகம் உடல் நிலையை புட்டு புட்டு வைக்கும் என்றால் நம்ப முடிகிறதா?

Divya

நமது கை,கால் நகங்களை வைத்து நமது உடல் ஆரோக்கியத்தை கணித்துவிட முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.நமது நகங்கள் கெரட்டின் என்ற கடின புரோட்டினால் ஆனவை.இந்த நகம் நமது உடலின் வெளிப்புறத்தில் இருக்கிறது.

நம் கை கால் விரல்களின் நுனியில் கவசம் போல் இயற்கையாக இந்த நகங்கள் அமைந்திருக்கிறது.நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான நகங்கள் வளர்வதில்லை.சிலருக்கு நகங்களின் அடர்த்தி அதிகமாக இருக்கும்.சிலருக்கு வேகமாக வளரக் கூடிய நகங்கள் இருக்கும்.நமது ஒவ்வொரு நகமும் மாத்திற்கு மூன்று மில்லி மீட்டர் வரை வளரும் தன்மை கொண்டது.

நம் நகத்தை வைத்தே நமது உடல் ஆரோக்கிய நிலையை கண்டுபிடிக்க முடியும்.நம் நகங்களின் குறுக்கே அதிக பள்ளங்கள் இருந்தால் வயதாகிவிட்டது என்று அர்த்தம்.நகங்கள் அழுக்கு நிறத்தில் இருந்தால் அது பூஞ்சை தொற்று இருப்பதை உணர்த்துகிறது.

நகங்கள் கருப்பாக மாற ஊட்டச்சத்து குறைபாடு,பூஞ்சை தொற்று முக்கிய காரணமாகும்.நகங்களில் டிரைக்கோபைட்டன் ரூப்ரம் என்ற பூஞ்சை தொற்று ஏற்பட்டால் நகங்கள் கருப்பாக,சொத்தையாக மாறும்.நகச்சொத்தையை நகப்படை என்றும் அழைப்பார்கள்.

உங்கள் நகங்கள் வெளுத்து இருந்தால் அது நிமோனியா,சொரியாசிஸ் போன்ற பாதிப்புகளுக்கான அறிகுறியாக இருக்கலாம்.அதேபோல் உங்கள் நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது நுரையீரல் பாதிப்பை உணர்த்தும்.தைராய்டு பாதிப்பு,நீரிழிவு நோய்,சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் கை கால் விரல் நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

உங்கள் நகங்களின் நிறம் நீல நிறத்தில் இருந்தால் நுரையீரல் பாதிப்பிற்கான அறிகுறியாக இருக்கக் கூடும்.நகங்களுக்கு நடுவே கருப்பு கோடுகள் தென்பட்டால் அது புற்றுநோய் பாதிப்பிற்கான அறிகுறியாக இருக்கக் கூடும்.உங்கள் நகம் வளைந்திருந்தால் அது இரும்புச்சத்து குறைபாடு இருப்பதை குறிக்கும்.