கண்ணாடி போட்டவங்கலா நீங்க?? அப்ப இது உங்களுக்கு தான் மிஸ் பண்ணாம பாருங்க!!

Photo of author

By CineDesk

கண்ணாடி போட்டவங்கலா நீங்க?? அப்ப இது உங்களுக்கு தான் மிஸ் பண்ணாம பாருங்க!!

CineDesk

Can you buy glasses? Then this is for you look Miss Pannama !!

கண்ணாடி போட்டவங்கலா நீங்க?? அப்ப இது உங்களுக்கு தான் மிஸ் பண்ணாம பாருங்க!!

வளர்ந்து வரும் நவீன காலத்தில் அதிகமாக தொலைபேசி, டேப்,  கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற கதிர்வீசி அதிகம் வெளியாகும் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண் பார்வையை இழந்து விடுகின்றனர்.  இதனால் சிலர் அவர் குழந்தை பருவத்தில் இருந்தே கண்ணாடியை போட்டுக் கொண்டு வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விடுகின்றனர். மேலும் ஒருமுறை ஒருவர் கண்ணாடி அணிந்து விட்டால் அவர் அந்த கண்ணாடியை வாழ்நாள் முழுவதும் தொடரும் நிலைக்கு ஆளாகி விடுகின்றனர். இந்த நிலையை போக்க நாம் வீட்டில் இருந்தேன் கண் பார்வை கூட சில மருத்துவ குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் கண் பார்வை விரைவில் கூடும்.

சாதிக்காயை பசும்பாலில் ஊறவைத்து கண்களை சுற்றி இரவில் பத்து போட்டு வந்தாள் கண் பார்வை கூடும். மேலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் முருங்கை கீரையையும், வாரம் ஒருமுறை அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட்டு வரவும். பார்வை குறைபாடு நீங்கி பார்வை பளிச்சிடும் கண்ணாடி அணிந்து இருப்பவர்கள் கூட கண்ணாடியை கழற்றிவிட்டு சுலபமாக பார்க்கலாம். மேலும் கொட்டை நீக்கிய நெல்லிக்காய் மற்றும் கடுக்காய், தேயிலையை நன்கு வேகவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் இரண்டு கிராம் சாப்பாட்டில் போட்டு சாப்பிட்டு வந்தால் பார்வை குறைபாடு சரியாகும். பசும்பாலில் முருங்கை பூவை சேர்த்து நன்கு காய்ச்சி காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகரிக்கும் மேலும் கண் பார்வை தெளிவு பெறும்.

 50 மில்லி அறுகம்புல் சாறு இளநீர் கலந்து அதோடு சிறிதளவு தேன் சேர்த்து காலை மாலை என இரு வேளையும் சாப்பிட்டு வர கண் பார்வை குறைபாடு சரியாகும். கண் பார்வையை அதிகரிக்கும். தினமும் 4 பேரிச்சம் பழம், 50 கிராம் திராட்சை, மலை வாழை, ரஸ்தாளி பழம்  ஆகியவற்றை தேங்காய்ப்பால் அல்லது பசும் பாலுடன்  சேர்த்து வாரம் இருமுறை அல்லது வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் கண்ணுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் தினமும் காலையில் கண் பயிற்சி செய்துவர கண் உறுதி பெறும். குறிப்பு: மேற்கண்ட ஏதாவது ஒரு குறிப்புகளை மட்டும் தினமும் பயன்படுத்தவும். இவற்றை பயன்படுத்தினாலே கண்பார்வை எளிதில் குணமடையும்.