உடலுக்கு நீர் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகினால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும்.உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
நீர்ச்சத்து குறைபாடு இருந்தால் சருமப் பிரச்சனைகள் ஏற்படும்.உடலில் போதிய தண்ணீர் இல்லையென்றால் சிறுநீர் வெளியேற்றுவது கடினமாகிவிடும்.சிறுநீரக கல்,சிறுநீர் பாதை தொற்று போன்ற பாதிப்புகள் தண்ணீர் குடிக்காமையால் ஏற்படுகிறது.
காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் அவசியம் பருக வேண்டும்.வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் வயிறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.சிலர் சாப்பிடும் பொழுது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.
சிலருக்கு தண்ணீர் இல்லாமல் சாப்பாடு உள்ளே இறங்காது.சாப்பிடும் பொழுது விக்கி கொள்ளாமல் இருக்க தண்ணீர் குடிக்கின்றோம்.தண்ணீர் குடித்தால் சாப்பாடு சீக்கிரம் செரிமானமாகும் என்று பலர் நினைக்கின்றனர்.
ஆனால் சிலர் சாப்பிடும் பொழுது தண்ணீர் குடிக்க கூடாது என்று சொல்கின்றனர்.உண்மையில் சாப்பிடும் பொழுது தண்ணீர் குடிப்பது நல்லதா கெட்டதா என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.சாப்பிடும் பொழுது தண்ணீர் அருந்துவது நல்ல பழக்கம் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவிற்கு இடையில் அல்லது உணவு கொண்ட உடனே தண்ணீர் அருந்தினால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.உணவு உட்கொள்ளும் பொழுது தண்ணீர் பருகினால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுமாம்.
உணவு உட்கொண்ட பிறகு குளிர்ந்த நீரை பருகினால் வயிற்று பிடிப்பு ஏற்படும்.உணவு உட்கொள்ளும் பொழுது தண்ணீர் அருந்தும் பழக்கம் இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.உணவு சாப்பிடும் பொழுது அதிகளவு தண்ணீர் குடிப்பதால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டுவிடும்.இதனால் உடலுக்கு போதிய உணவு உட்கொள்ள முடியாமல் ஊட்டச்சத்து குறைபாட்டை சந்திக்க நேரிடும்.
எனவே நிபுணர்கள் கூற்றுப்படி உணவு உட்கொள்வதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர்குடிக்கலாம்.அதேபோல் உணவு உட்கொண்ட அரை மணி நேரத்திற்கு பின்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்.உணவு சாப்பிடும் பொழுது அவசியம் தண்ணீர் பருக வேண்டுமென்றால் சிறிதளவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
உணவுக்கு கொண்டு சிறிது நேரம் கழித்து வெது வெதுப்பான தண்ணீர் பருகினால் செரிமானப் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.உணவை நன்கு மென்று சாப்பிட்டால் தண்ணீர் குடிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படாது.