அசைவ பிரியர்கள் உணவுப் பட்டியலில் ஆட்டிறைச்சிக்கு எப்பொழுதும் தனி இடம் உண்டு.கோழி இறைச்சியை காட்டிலும் ஆட்டிறைச்சியில் அதிக சதுக்கள் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது ஆட்டிறைச்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மறுத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆட்டில் இருந்து கிடைக்க கூடிய அனைத்து பாகங்களும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு. ஆட்டுக்கால்,நுரையீரல்,ஆட்டுக்குடல்,ஆட்டுமூளை,ஆட்டுத்தலை,ஆட்டு இரத்தம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சிலருக்கு ஆட்டு இரத்தத்தில் பொரியல் செய்து சாப்பிடுவது பிடித்தமான ஒன்றாக இருக்கும்.ஆட்டு இரத்தத்தில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது.அது மட்டுமின்றி புரதம்,வைட்டமின் பி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
ஆட்டு இரத்தத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
*பாஸ்பரஸ்
*வைட்டமின் பி
*ஒமேகா 3 கொழுப்பு அமிலம்
*சோடியம்
*கால்சியம்
*புரதம்
ஆட்டு இரத்தம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்:
ஆட்டு இரத்தத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் குணமாகும்.ஆட்டு இரத்தத்தில் இரும்புச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இது உடலில் இரும்புச்சத்து பற்றாக்குறையை போக்க உதவுகிறது.
இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகப்படுத்த ஆட்டு இரத்தம் சாப்பிடலாம்.வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.ஆட்டு இரத்தத்தில் துத்தநாகம் நிறைந்து காணப்படுகிறது.இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
ஆட்டு இரத்தத்தில் உள்ள வைட்டமின் பி உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.ஆட்டு இரத்தத்தில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்து இருப்பதால் இதை உட்கொள்வதால் சருமம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டுவிடலாம்.ஆட்டு இரத்தத்தை சாப்பிட்டு வந்தால் நமது உடலில் இரத்தம் ஊறும்.இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் ஆட்டு இரத்தம் சாப்பிடலாம்.
சிலருக்கு ஆட்டு இரத்தம் சாப்பிடுவதால் வயிற்று வலி,பேதி,ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இதுபோன்ற பிரச்சனை இருப்பவர்கள் இதை தவிர்த்துவிடுவது நல்லது.
அதேபோல் சர்க்கரை நோயாளிகள்,உடல் பருமன்,இரத்த கொதிப்பு,கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் ஆட்டிறைச்சி மற்றும் சிவப்பு இறைச்சியை குறைவான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.