ஆமை மோதிரம் போட்டுக் கொண்டால் இத்தனை பலன்களை அனுபவிக்க முடியுமா!!?

Photo of author

By Divya

ஆமை மோதிரம் போட்டுக் கொண்டால் இத்தனை பலன்களை அனுபவிக்க முடியுமா!!?

ஆமை வடிவ மோதிரம் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த மோதிரத்தை அணிவதால் பணப் பிரச்சனை நீங்கும். ஆமை லட்சுமி தேவியின் சின்னமாக கூறப்படுகிறது. இந்த மோதிரத்தை அணிந்தால் வீட்டில் செல்வம் அமைதியும் உண்டாகும் என்பது ஐதீகம்.

ஆமை மோதிரம் அணிவதால் கிடைக்கும் பலன்:-

*வேலை வாய்ப்பு தேடி வரும்

*பதவி உயர்வு கிடைக்கும்

*பண வரவில் முன்னேற்றம் உண்டாகும்

*கடன் தொல்லை நீங்கும்

*கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்

*செல்வம் பெருகும்

*வீட்டில் சந்தோசம் நிலைக்கும்

*கண் திருஷ்டி ஒழியும்

இத்தனை மகத்துவம் உள்ள இந்த மோதிரத்தை வெள்ளியில் அணிய வேண்டும். முடிந்தவர்கள் தங்கத்தில் அணியலாம்.

இந்த ஆமை மோதிரம் வாங்க உந்த நாள் & நேரம்:

வளர்பிறை வெள்ளி அன்று மதியம் 1 முதல் 2 மணிக்குள் வாங்க வேண்டும். வீட்டிற்கு வாங்கி வந்த பின்னர் ஒரு கிண்ணத்தில் சிறிது பால் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து தண்ணீர், சிறிதளவு பன்னீர், 1 சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு ஆமை மோதிரத்தை அதில் போட்டு மாலை 6 மணி வரை ஊற விடவும்.

பின்னர் 6 மணிக்கு சாமிக்கு விளக்கு ஏற்றும் பொழுது ஆமை மோதிரத்தை எடுத்து ஒரு தட்டில் வைத்து பூஜை அறையில் சிறிது நேரம் வைத்து விடவும்.

பின்பு இரவு 8 முதல் 9 மணிக்குள் இதை மோதிர விரலில் அணிந்து கொள்ளவும். ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு அன்று ஒரு கிண்ணத்தில் பன்னீர் ஊற்றி மஞ்சள்த் தூள், பச்சை கற்பூரம் கலந்து அதில் ஆமை மோதிரத்தை போட்டு வைத்து மறுநாள் காலை அதை எடுத்து அதை அணியவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்வது வர நினைத்த காரியங்கள் நிச்சயம் நிறைவேறும்.ஆமை வடிவ மோதிரம் பல