உலகில் பொரும்பாலான மக்கள் அசைவப் பிரியர்களாக இருக்கின்றனர்.நமது இந்தியாவில் கோழி இறைச்சியை அடுத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் அசைவமாக ஆட்டிறைச்சி இருக்கிறது.செம்மறி ஆடு,வெள்ளாடு என்று இரு வகை ஆட்டிறைச்சி சாப்பிட்டு வருகிறோம்.
இதில் 100 கிராம் செம்மறி ஆட்டிறைச்சியில் 300 கலோரிகள்,20 கிராம் ஃபேட்டுகள்,100 மில்லி கிராம் கொழுப்பு நிறைந்திருக்கிறது.இந்த சிவப்பு இறைச்சியை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டால் எவ்வித பிரச்சனையும் இல்லை.ஆனால் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்காக மாறிவிடும்.
செம்மறி ஆட்டிறைச்சியில் உள்ள ஆட்டில் ஃபேட் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து மாரடைப்பிற்கு வழிவகுத்துவிடும்.
சிவப்பு இறைச்சியில் இருக்கின்ற கொழுப்பு இதய ஆரோக்கியத்திற்கு கெடுதலை ஏற்படுத்துகிறது.சிவப்பு இறைச்சி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் இதனை தவிர்ப்பது நல்லது.
உடல் பருமனாக இருப்பவர்கள் சிவப்பு இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இரத்த அழுத்தம்,இரத்த கொதிப்பு,இருதய பிரச்சனை இருப்பவர்கள் சிவப்பு இறைச்சியை சாப்பிட கூடாது.சிவப்பு இறைச்சியை தொடர்ந்து எடுத்து வந்தால் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயம் அதிகரிக்கும்.இதனால் சிவப்பு இறைச்சியை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.