பிராங்க் வீடியோ இனி பண்ணலாம்? பொதுமக்களின் கருத்து!

0
225
Can you make a frank video? Public opinion!
Can you make a frank video? Public opinion!

பிராங்க் வீடியோ இனி பண்ணலாம்? பொதுமக்களின் கருத்து!

பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் பலர் தங்களின் சுயநலத்திற்காக மக்களின் உணர்வுகளில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் யூடியூப் சேனல்கள் பணம் சம்பாதிப்பதற்காக பொதுமக்களை வேடிக்கை பொருட்களாக பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் யூடியூப் சேனல் ஒன்று பிராங்க் வீடியோ எடுத்துள்ளது. அந்த பிராங்கால் பாதிப்படைந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் கோவை காவல் ஆணையர்  அந்த யூட்யூப் சேனல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொது மக்களை துன்புறுத்தும் வகையிலும், மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் இவ்வாறு பிராங் செய்யப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இந்த எச்சரிக்கையானது பல யூடியூப் சேனல்களுக்கு பேரடியாக  அமைந்துள்ளது. இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்று பொதுமக்களிடம் இனி பிராங் செய்யலாமா? செய்யக்கூடாதா என்ற கருத்தை கேட்டறிந்தது.

அதில் பெரும்பான்மையான மக்கள் கூறியது,பிராங் செய்தால் தனிமனித உணர்வுகளை பாதிக்காதவாறு இருக்க வேண்டும். அவ்வாறு பாதிக்கும்படி செய்யும் பிராங்க்குகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு சிலர் , நேரம் காலம் அறியாமல் இவர்கள் தங்களை வேடிக்கையாக பயன்படுத்திக் கொள்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது என கூறியுள்ளனர். ஆனால் தனிமனிதரை பாதிக்காத வகையில் எடுக்கலாம் என்ற கருத்தை தான் பெரும்பான்மையோர் கூறியுள்ளனர்.

Previous articleஅய்யோ!.சாமி எங்கள காப்பாத்துங்க!!குடி போதையில் பொந்தில் சிக்கிய போதைக்காரா பெருத்த வண்டுகள்!!
Next articleஆசிரியர்கள் தினம்! தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு!