மெட்ராஸ் ஐ பாதித்தவரை பார்த்தால் நோய் பரவுமா? இதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

Photo of author

By Divya

மெட்ராஸ் ஐ பாதித்தவரை பார்த்தால் நோய் பரவுமா? இதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

Divya

பருவமழை காலங்களில் கண் சம்மந்தபட்ட பாதிப்புகள் அதிகமாக ஏற்படும்.மழைக்காலங்கள் மட்டுமின்றி வெயில் காலத்திலும் இந்த நோய் பாதிப்பு வரலாம்.கண் நோய்களில்மெட்ராஸ் ஐ அச்சுறுத்தும் ஒரு பாதிப்பாக இருக்கிறது.

இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பை அடினோ வைரஸ் என்றும் அழைக்கின்றனர்.இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பு பெரியவர்கள்,குழந்தைகள் என்று யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பு இருப்பதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.

மெட்ராஸ் ஐ அறிகுறிகள்:

1)கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுதல்
2)கண்களில் இருந்து தானாக நீர்வடிதல்
3)கண் எரிச்சல் மற்றும் கண்களில் நமைச்சல் உண்டாதல்
4)கண் பார்வை குறைபாடு
5)எந்நேரமும் கண்கள் உறுத்திக் கொண்டே இருத்தல்
6)கண்களில் அதிக பூளை வருதல்
7)கண் கூச்சம்
8)கண்களில் நமைச்சல் உண்டாதல்

மெட்ராஸ் ஐ பாதிப்பு இருப்பவர்களை பார்த்தால் தங்களுக்கும் கண்கள் பாதிக்கப்பட்டுவிடும் என்று அனைவரும் பயன்படுகின்றனர்.ஆனால் உண்மையில் மெட்ராஸ் ஐ பாதித்தவரை பார்த்தால் இந்நோய் பாதிப்பு பரவாது.

மெட்ராஸ் ஐ பாதிப்பு இருப்பவர்கள் தங்கள் கண்களை தொட்டுவிட்டு பிற இடங்களை தொடும் பொழுது அவ்விடத்தை நாம் தொட்டால் இந்நோய் பாதிப்பு பரவும்.மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் தங்கள் கண்களை தொட்டுவிட்டு பிறரை தொடும் பொழுது இந்த நோய் தொற்று பரவும்.

இதன் காரணமாகதான் மெட்ராஸ் ஐ பாதித்தவர்களை கண்ணாடி அணிய வேண்டுமென்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.மெட்ராஸ் ஐ பாதித்தவர்களுக்கு முழுமையாக குணமாக ஒரு மாத காலம் ஆகும் என்பதால் முடிந்தவரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதுதான் நல்லது.

அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.கண்ணாடி அணிவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.கண்களை அடிக்கடி தொடுவதை தவிர்க்க வேண்டும்.மற்றவரிடம் பேசும் பொழுது இடைவெளியை கடைபிடிக்க வேண்டும.மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் மற்றவர்களின் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.