நம் உடல் ஆரோக்கியத்திற்கு உணவு அடிப்படையான ஒன்று.நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதேபோல் உணவு உட்கொண்ட பிறகு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டியது முக்கியம்.
உணவு உட்கொண்ட பிறகு உடற்பயிற்சி,நடைப்பயிற்சி போன்றவற்றை செய்யக் கூடாது என்பது பெரும்பாலானோருக்கு தெரியும்.அதேபோல் சாப்பிட்ட உடனே குளிக்க கூடாது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
சாப்பிட்ட பிறகு உறங்க கூடாது,கடின வேலை செய்யக் கூடாது என்பது போல் சாப்பிட்ட பிறகு குளிக்கவும் கூடாது.நம் வீட்டில் இருக்கின்ற பெரியவர்கள் சாப்பிட்ட பின்னர் குளிக்க கூடாது என்று சொல்லவர்கள்.அதற்கு பின்னால் ஆச்சர்யப்படும் காரணம் இருக்கிறது.
நாம் சாப்பிட்ட பிறகு குளிப்பதற்கு 45 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.சாப்பிட்ட பின்னர் உணவு செரிமானமாக தாமதமாகும்.சாப்பிட்ட உணவு வயிற்றை நோக்கி செல்ல இரத்த ஓட்டம் அவசியம் தேவைப்படும்.நமது உடலில் மற்ற இடங்களுக்கு இரத்தம் பாய தாமதமாகும்.இந்த நேரத்தில் குளித்தால் செரிமான மண்டல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.இதனால் மலச்சிக்கல்,வயிற்று வலி,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
அதேபோல் உணவு சாப்பிட்ட பிறகு பழங்கள் சாப்பிடக் கூடாது.சாப்பிட்ட பிறகு உறங்க கூடாது.சாப்பிட்ட உடனே சூடான பானங்கள் பருகக் கூடாது.சாப்பிட்ட பின்னர் சிகிரெட் பிடிக்க கூடாது.சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி செய்யக் கூடாது.சாப்பிட்ட பின்னர் வேகமாக நடக்க கூடாது.சாப்பிட்ட பின்னர் வயிற்றுக்கு அழுத்தம் கொடுக்கும் வேலையை தவிர்க்க வேண்டும்.எனவே உணவு உட்கொண்ட பிறகு இது போன்ற விஷயங்களை செய்வதை தவிர்க்க வேண்டும்.