கனரா வங்கியானது வைப்பு நிதிக்கான வட்டியை அதிரடியாக குறைத்து இருப்பது கனரா வங்கியின் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
ரூ.3 கோடிக்கு குறைவான வைப்பு நிதிகளை வைத்திருக்கக் கூடியவர்கள் வட்டி விகிதங்கள் திடீரென 20 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான புதிய விகிதங்கள் ஏப்ரல் 10 2025 முதல் கனரா வங்கி அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது.
இந்த புதிய விகிதங்கள் படி ,
✓ பொதுமக்களுக்கு வங்கியில் 4% முதல் 7.25% வரை வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. இதற்கு முன்னதாக 4% முதல் 7.40% வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
✓ மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 7.90% வரை இருந்த வட்டி விகிதங்கள் தற்பொழுது 4% முதல் 7.75% ஆக குறைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
இவை மட்டுமில்லாமல் கனரா வங்கி குறிப்பிட்ட நாட்களுக்கான வட்டி விகிதங்களையும் மாற்றி இருக்கிறது. அதன்படி 7 முதல் 45 நாட்களுக்கு முதிர்ச்சியடைந்த வைப்புத் தொகைக்கு 4 சதவிகித வட்டியையும், 46 முதல் 90 நாட்களுக்கு முதிர்வடைந்த வைப்பு தொகைக்கு 5.25 சதவிகித வட்டியும் வழங்குகிறது.
இதேபோன்றுதான் 91 நாட்கள் முதல் 129 நாட்கள், 180 முதல் 269 நாட்கள், 270 நாட்களுக்கு மேல் முதல் ஒரு வருடம் குறைவான கால அளவுள்ள வைப்பினதிகள் என ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றவாறு அவற்றினுடைய வட்டி விகிதங்கள் மாறுபட்டு அமைந்துள்ளன. இனி கனரா வங்கியில் வைப்புத் தொகை வைக்க நினைப்பவர்கள் அதற்கான கால அளவுகள் மற்றும் வட்டி விகிதங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பின் FD கணக்குகளை துவங்குவது நன்மை பயக்கும்.