பல கோரிக்கைகளை முன்வைத்து 2019ஆம் வருடம் ஜனவரி மாதத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள் ஏராளமான அரசு ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதோடு அவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. துறை ரீதியான நடவடிக்கை, மற்றும் தங்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென்று அவர்கள் சார்ந்த சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள், மீது போடப்பட்ட வழக்குகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்று அனைத்தையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், ஆசிரியர்கள் மற்றும் தமிழக அரசின் ஊழியர்கள் மீது இருக்கின்ற வழக்குகளையும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த நடவடிக்கையானது எதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டது என்று எதிர்க் கட்சிகளும், அரசியல் நோக்கர்களும் விமர்சனம் செய்து வருகிறார்கள். வரும் சட்டசபைத் தேர்தலின்போது அரசு ஊழியர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே மாநில அரசு இந்த சமாதான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.