மீண்டும் இந்த வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! கல்வித்துறை வெளியிட்ட தகவல்!
கொரோனா என்ற பெரும் தொற்று 2 ஆண்டு காலமாக மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இதில் இருந்து மக்களை மீட்க அனைத்து நாட்டு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் இத்தொற்றுக்கு முடிவு என்பதை தற்போது வரை காணப்படவில்லை. தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு மக்கள் செலுத்தி வரும் நிலையிலும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே மீண்டும் தொற்று உறுதியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
மேலும் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. ஆன்லைன் முறையிலேயே மாணவர்கள் பாடங்களை பயின்று வந்தனர். தற்பொழுது தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வருவதாலும் வேறொரு சில காரணங்களினாலும் அரசின் அங்கன்வாடி பள்ளிகளில் மீண்டும் மூடுவதாக தகவல் கசிந்தது. அந்த வகையில் அங்கன்வாடி மையங்களில் உள்ள எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் ரத்து செய்யப்படும் என்ற அரசாணை வெளிவருவதாக பல தகவல்கள் வந்தது.
இந்த பள்ளிகள் ஆரம்பகட்ட காலத்தில் மூடுவதால் நாளடைவில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மூடப்படும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இவ்வாறான தகவல்கள் வெளியானதை அடுத்து தொடக்கக் கல்வித் துறை உயர் அதிகாரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இதுவரை தமிழகத்தில் 2381 அங்கன்வாடிகள் உள்ளது. அந்த அங்கன்வாடிகளில் உள்ள எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் ரத்து செய்யப்படும் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது. யாரும் அதனை நம்ப வேண்டாம். மேலும் அங்கன்வாடியில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெறுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று கூறினார்.