இன்று மார்ச் 19ஆம் தேதி RRB நடத்தக்கூடிய ரயில்வே உதவி லோகோ பைலட் பணியிடத்திற்கான தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தேர்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை தேர்வு நேரத்துக்கு சற்று முன்னதாக தேர்வு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டை சேர்ந்த 6000 மாணவர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் அமைத்தது தமிழர்களிடையே எதிர்ப்பை பெற்ற பொழுதிலும் தேர்வு மையங்கள் மாற்றி அமைக்கப்படவில்லை. RRB தேர்வு மையங்களை தமிழகத்தில் மாற்றி அமைக்கவில்லை என்றாலும் தமிழக மாணவர்கள் தங்களுடைய வேலைக்காக தேர்வு எழுத தெலுங்கானா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு சென்ற நிலையில் தேர்விற்கு முன்னதாக தேர்வு ரத்து செய்யப்பட்டது என்ற அறிவிப்பு வெளியாகி மாணவர்களை அதிருப்தி அடைய செய்திருக்கிறது.
தெலுங்கானா மற்றும் ஆந்திரா இல்லாமல் ஹைதராபாத் தேர்வு மையங்களுக்கு தமிழகத்தில் இருந்து சென்ற மாணவர்கள் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இன்று நடைபெற இருந்த தேர்வை ரத்து செய்ததால் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தமிழக மாணவர்கள் பிற மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் பொழுது அவர்களுக்கான பயணம் மொழி பிரச்சனை போன்றவற்றை கடந்து தங்களுடைய எதிர்காலத்திற்காக சென்ற பொழுதிலும் கூட திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவித்திருப்பது பல அரசியல் கட்சிகள் இடையே கண்டனத்தை பெற்று வருகிறது.