கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆன்மீக பயணங்கள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள்!
கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக பயணங்கள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள். மன அமைதியுடன் காணப்படுவீர்கள். நினைத்த காரியங்கள் எல்லாம் நடைபெறும்.
குடும்ப உறவு அதி அற்புதமான சூழ்நிலைகள் நிலவும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் வருமானம் வந்து சேரலாம். உத்தியோகத்தில் மனக்கவலை குறையும். தொழில் வியாபாரம் அருமையாக நடைபெறும்.
அரசியலில் இருக்கும் அன்பர்கள் குழப்பமின்றி செயல்படுவார்கள். கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் இருந்து வந்த காலதாமதங்கள் விலகும்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் ஆன்மீகப் பயணங்களின் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும் உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது அவசியம்.
மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு திடீரென வெளியூர் பிரயாணம் உண்டாகலாம்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.