கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் தைரியம் ஊற்றெடுக்கும் நாள்!

Photo of author

By CineDesk

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் தைரியம் ஊற்றெடுக்கும் நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் ஊற்றெடுக்கும் நாள். எந்த ஒரு காரியத்தையும் நீங்கள் கணக்கச்சிதமாக செய்து முடிக்கும் நாள். குடும்ப உறவு திருப்திகரமாக அமையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் முன்னேற்றம் கைகொடுக்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எல்லா வேலைகளையும் அருமையாக செய்து முடித்து முன்னேற்றம் அடைவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகளை புகுத்தி முன்னேறுவீர்கள். அரசியலில் இருக்கும் அன்பர்களுக்கு தைரியமான சூழ்நிலை உருவாகும். கலைத்துறை சேர்ந்த நண்பர்கள் கவனமாக செயல்படுவார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகளின் வருகையால் இல்லம் களைகட்டி இருப்பதைக் கண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சாரபரமேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.