கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! முன்னேற்றம் பெறும் நாள்!
கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். நீங்க இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்றால் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி நீங்கி முன்னேற்றம் பெறுவீர்கள். ஏனென்றால் இன்றைக்கு சாயந்திரம் வரைக்கும் சந்திர பகவான் உங்கள் ராசியில் தங்கியுள்ளார்.
ஆகையால் நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. சாயங்காலத்திற்குப் பிறகு தனபகவான் உங்கள் ராசிக்கு வருவதால் தன வரவு ஏற்படும். கணவன் மனைவியே சின்ன சின்ன ஊழல்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு ஆனாலும் அது சந்தோஷமா மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கைத் துணைவி உறவினர்கள் மூலம் சில பிரச்சனைகள் வரலாம்.
பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்ற இறக்கமாக அமையும். வருமானம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் ஓரளவுக்கு கிடைக்கும். தொழில் வியாபாரம் அருமையாக செல்லும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் எந்த ஒரு முயற்சியையும் சாய்ந்தரத்திற்குப் பிறகு நடத்துவது நல்லது.
கலைத்துறையில் இருக்கும் அன்பர்கள் வருமான வாய்ப்பு கிடைத்து மகிழ்ச்சி அடைவார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீன் அலைச்சல் உருவாகலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் எடுப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு அணுகலமாக இருக்கும் என்றாலும் உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் நல்லது.
மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்த மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டி வரலாம். மூத்த வயதில் இருப்பவர்கள் உடல் நலத்தில் கவனமாக இருப்பது நல்லது. வெளிநாட்டு வசிக்கும் அன்பர்கள் எந்த ஒரு பிரச்சனையையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து அதற்குண்டான தீர்வை யோசிப்பது மிகவும் நல்லது.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிறம் ஆடையை அணிந்து மீனாட்சி அம்மனை வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.