கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள்!

Photo of author

By CineDesk

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள். சந்திர பகவான் அஷ்டம ராசியில் இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் இழுபறி ஆகலாம். வாகன பயணங்களில் கவனமாக செல்வது நல்லது. நிதி வருவதற்கு காலதாமதம் ஆகலாம்.

கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் எழலாம் என்பதால் கூடுமானவரை அனுசரித்துச் செல்வது அவசியம். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம்.

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூடுமானவரை கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது அவசியம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். புதிய முதலீடுகளை இன்றைய தினம் தவிர்த்தல் நல்லது.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் தீன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அரசியல்வாதிகள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து ஹய்கிரிவரை வணங்கி விடுபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிய திருமண நாள் ஆக அமையும்.