கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! உறவுகளால் நன்மை கூடும் நாள்!

Photo of author

By CineDesk

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! உறவுகளால் நன்மை கூடும் நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உறவுகளால் நன்மை கூடும் நாள். இன்றைக்கு நீங்கள் எதிர்பாராத உறவுகள் உங்கள் இல்லத்திற்கு வருவதால் எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். நிதி சிறப்பாக உள்ளது.

கணவன் மனைவியே ஒற்றுமை அருமையாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் இந்த நேரத்தில் உங்களுக்கு அருமையான ஆலோசனைகளை வழங்குவார்கள். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு இருக்கலாம்.

தொழில் மற்றும் வியாபாரம் வேறு இடத்திற்கு மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். கொடுக்கல் வாங்கல்கள் மிக சிறப்பான பாதையில் செல்லும்.

உதயகத்தில் உள்ள பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் கலைக்கட்டி இருப்பதை கண்டு மணமகிழ்ந்து போவார்கள்.

நண்பர்கள் உறவினர்களுடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமி வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.