கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆலய வழிபாட்டினால் நிம்மதி காண வேண்டிய நாள்!

0
109
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆலய வழிபாட்டினால் நிம்மதி காண வேண்டிய நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆலய வழிபாட்டினால் நிம்மதி காண வேண்டிய நாள். ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். வாகன பயணங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நிதி வருவதற்கு காலதாமதம் ஆகும்.

கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பகைமை பாராட்ட வேண்டாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில எண்ணங்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூடுமானவரை கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது அவசியம்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒரு வித கவலை குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களை எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் பிரச்சனைகள் வரலாம் என்பதால் கூடுமானவரை அவர்களை அனுசரித்து செல்லுங்கள்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!!எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!
Next articleசிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!