கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன வரவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது!
கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சந்திர பகவான் ஜீவ ஸ்தானத்தில் உள்ளதால் ஆற்றல் உடன் காணப்படுவீர்கள். மாலையில் சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு வருவதால் தன வரவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
கணவன் மனைவியிடையே அனுகூலமான சூழ்நிலை நிலவும். குடும்ப உறுப்பினர்களிடம் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும்.
உதயகத்தில் உள்ள பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் எதிர்பார்க்கலாம்.
அரசியல்வாதிகள் மகிழ்ச்சியோடு காணப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் இருந்து வந்த காலதாமதம் விலகும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.