கடகம் – இன்றைய ராசிபலன்!! சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

0
79
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் – இன்றைய ராசிபலன்!! சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள். இன்று உங்களுக்கு எட்டு திசைகளில் இருந்து சந்தோஷம் கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் கவனத்துடன் செயல்படுங்கள் உங்களுக்கு நல்ல நாளாக உள்ளது. நிதி அற்புதமாக உள்ளது.

 

கணவன் மனைவியிடையே அதி அற்புதமான உணர்வு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

 

தொழில் மற்றும் வியாபாரம் சுபிட்சகரமாக நடைபெறும். நீங்கள் கேட்டிருந்த உதவிகள் தானாக வந்து சேரும். கொடுக்கல் வாங்கல்கள் அதிக அற்புதமான பாதையில் செல்வதால் புதிய முதலீடுகளை புகுத்தி முன்னேறுவீர்கள்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வருமான வாய்ப்புகள் உண்டாக்கலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் நடைபெறும். அரசியல்வாதிகள் முக்கிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைப்பயில்வார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் அதி அற்புதமான நாளாக உங்களுக்கு அமையும்.