கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்!!

Selvarani

கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள். நிதி ஓரளவிற்கு உங்களுக்கு அனுகூலமாக இருந்தாலும் செலவுகளும் வந்து சேரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்களுக்காக சில செலவுகளை செய்வீர்கள்.

உத்தியோகத்தில் பணியிடமாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எதிர்பாராத சில சந்தோஷமான வாய்ப்புகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்காக சில விஷயங்களை நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கலை நிகழ்ச்சிகளுக்காக வெளியே கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவம் கை கொடுக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.