கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

0
302
#image_title

கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். கஸ்டமர் ராசியில் சந்திர பகவான் இருப்பதால் மனக்குழப்பம் உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பேசும் வார்த்தைகளில் கவனம் வேண்டும். வாகன பயணங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய சிறு சிறு பிரச்சனைகள் எழலாம் என்பதால் கூடுமானவரை அனுசரித்து செல்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வீண் அலைச்சல் வந்து சேரும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்படுவது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு வேலையை செய்யும் முன் எச்சரிக்கையுடன் காணப்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டுமென்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!
Next articleகன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here