கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் நாள்!!
கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் நாள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். குடும்ப ஒற்றுமை கூடும்.
வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும் இன்னல்கள் மறையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அமைதியாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பூர்விக சொத்துக்கள் சிலருக்கு வந்து சேரலாம்.
மாணவ மாணவிகள் கல்வியில் இருந்து வந்த மந்த நிலை அகன்று தெளிவான சூழ்நிலைக்கு வருவார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு வளர்ச்சிகள் அதிகரிக்கும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.