கடகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தொலைபேசி மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள்!!

0
158
#image_title

கடகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தொலைபேசி மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தொலைபேசி மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை மிக சிறப்பாக காணப்படும்.

உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகும்.. தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயண வாய்ப்புகளை மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உறவுகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலைகள் நிலவும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் சந்தோஷமான செய்திகளை காண்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்த ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் வியக்க வைக்கும் நன்மைகள்!!
Next articleசருமப் பிரச்சனைகளை தீர்க்க புன்னை எண்ணெயா!!இதோ பாருங்கள்!!