கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் நாள்!!

0
146

கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மனதெளிவு உண்டாகும். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவுவதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். இல்லத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு உண்டான அறிகுறிகள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக செல்லும். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுவீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் நூதன கிரகப்பிரதேசத்திற்கு திட்டமிடுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷம் செய்தி ஒன்று வந்து சேரும். இல்லத்தரசிகளுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் சந்தோஷத்தை கொடுக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி மகிழ்ச்சி கடலில் நீந்துவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்த ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்!!
Next articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் பளிச்சிடும் நாள்!!