கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் பொறுப்பும் மாலையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள்!!

0
144
#image_title

கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் பொறுப்பும் மாலையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் பொறுப்பும் மாலையில் மகிழ்ச்சியும் உண்டாகும் நாள்.குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் கவலை கொள்ள தேவை இல்லை.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஓரளவிற்கு அனுகூலமாக அமையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதனமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு முயற்சியிலும் மிகுந்த கவனத்துடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான வாய்ப்புகள் கண்டிப்பாக வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் பொறுப்புடன் பேசுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.