மாதவிடாய் பிரச்சனையா? மாதவிலக்கு சீராக வர  இதோ இதை பின்பற்றுங்கள்! 

0
196
#image_title

மாதவிடாய் பிரச்சனையா? மாதவிலக்கு சீராக வர  இதோ இதை பின்பற்றுங்கள்! 

பெண்களுக்கு இருக்கும் தலையாய பிரச்சினைகளில் ஒன்று மாதவிடாய் பிரச்சனை. ஒன்று அதிகமாக போகும். இல்லையெனில் இரண்டு மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் கூட வராமல் போகும்.

இது பல வகைகளில்மாதத்திற்கு ஒருமுறை அல்லது மாறுபட்ட சுழற்சியில் மாதவிடாய். மாதவிடாய் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை வராமல் இருப்பது. கருக்குழாய் அடைப்பின் காரணமாக மாதவிடாய் வராமல் போவது. மாதவிடாய் உண்டாகும்போது அதிகமான அடிவயிற்று வலி, உடல் அசதி, வாந்தி, குமட்டல், தலைச்சுற்றல் சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாத நிலை போன்றவை ஏற்படலாம்.

இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு மாதவிலக்கு சீராக வருவதற்கான எளிய சூப் ஒன்றின் செய்முறையை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. மணத்தக்காளி கீரை- 1 கைப்பிடி

2. தனியா – 1 ஸ்பூன்

3. சீரகம் – 1 ஸ்பூன்

4. சோம்பு – 1 ஸ்பூன்

5. இஞ்சி – 1 சிறிய துண்டு

6. பூண்டு – 4 பல்

7. சின்ன வெங்காயம் – 3

8. வெற்றிலை – 2

9. மிளகு – அரை ஸ்பூன்

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மேற்கண்ட பொருட்களை போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அதில் உள்ள சத்துக்கள் நீரில் இறங்கும் அளவு கொதிக்கவிட்டு பின்னர் வடிகட்டிக் கொள்ளவும்.

இதனை காலையிலேயும்  மாலையிலேயும் சாப்பாட்டுக்கு முன்போ அல்லது பின்போ சாப்பிட்டு வர வேண்டும். மாதவிலக்கு நேரத்தில் 10 நாளைக்கு மூன்று மாதங்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை காணாமல் ஓடிவிடும்.

இந்த சூப்பை மற்ற நாட்களில் கூட பெண்கள் தயார் செய்து சாப்பிடலாம். மிகுந்த ஆரோக்கியத்தை அள்ளித் தரும் சிறப்பான சூப் இது.