கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்படக்கூடிய நாள்!!

0
76

கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்படக்கூடிய நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்படக்கூடிய நாள். ஜீவனஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். நிதி நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களுக்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள்.

உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் சிறப்பான பாதையில் பயணிக்கும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் ஆற்றலுடன் செயல்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் வகையில் சில நன்மைகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் பொறுப்போடு செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடலுறவு சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani