பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்! மொத்தம் 165 காலி பணியிடங்கள் உள்ளது!

Photo of author

By Parthipan K

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்! மொத்தம் 165 காலி பணியிடங்கள் உள்ளது!

புதுச்சேரி அரசின் பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.கிளார்க் வேளையில் பணிபுரிய மொத்தம் 165 காலி பணியிடங்கள் உள்ளது.இதற்கு விண்ணப்பிக்க பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் தமிழ் ,ஆங்கிலம் ,தெலுங்கு ,மலையாளம் ஆகிய ஏதேனும் ஒரு மொழியில் இளநிலை தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

அதனையடுத்து ஸ்டோர் கீப்பராக பணிபுரிய மொத்தம் 55 காலி பணியிடங்கள் உள்ளது.இந்த பணியில் சேர விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு 32 வயது நிறைந்திருக்க வேண்டும்.மேலும் இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்த்தலின் படியே தகுதியானவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களை https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 29 ஆகும்.மேலும் இந்த பணிகள் பற்றி விவரங்கள் பெற https://recruitment.py.gov.in/recruitment/LDCSK2022/notification என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.