2024 ஆம் ஆண்டு முதல் கஞ்சா பயன்படுத்த அனுமதி! அரசின் புதிய சட்ட வரையறை அமல்!

0
254
Cannabis to be used from 2024! Government's new legal definition!
Cannabis to be used from 2024! Government's new legal definition! Cannabis to be used from 2024! Government's new legal definition!

2024 ஆம் ஆண்டு முதல் கஞ்சா பயன்படுத்த அனுமதி! அரசின் புதிய சட்ட வரையறை அமல்!

பல நாடுகளிலும் மது மற்றும் போதை பொருட்களை உபயோகிக்க தடை விதித்து வரும் நிலையில் தற்போது ஜெர்மனியில் கஞ்சா பயன்படுத்த சட்ட மசோதாவை இயற்ற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் இதற்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்று கூறி வருகின்றனர். இந்தியா உட்பட பல நாடுகளும் கஞ்சாவிற்கு எதிர்ப்பு தான் தெரிவித்து வருகின்றது.

ஏனென்றால் கஞ்சா பழக்கத்திற்கு வந்துவிட்டால் சிறு வயது இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் அதற்கு அடிமையாக நேரிடும். அதுமட்டுமின்றி அது உடல் நலத்திற்கும் மிகவும் தீங்கானது.

இருப்பினும் சில நாடுகள் இதனை மருத்துவத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மருத்துவத்திற்காக கனடா உருகுவே பிரான்ஸ் போர்ச்சுக்கல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மருத்துவத்திற்கு பெருமளவில் இதனை பயன்படுத்தி வரும் நிலையில், அமெரிக்கா தான் இதை உபயோகிக்கும் பங்கு அதிகம் என கூறுகின்றனர்.

அந்த வரிசையில் தற்பொழுது ஜெர்மனியும் இடம்பெறப் போகிறது எனக் கூறுகின்றனர் வரும் 2024 ஆம் ஆண்டு இந்த கஞ்சா பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் என்று கூறுகின்றனர்.

ஒருவர் 30 கிராம் வரை கஞ்சாவை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் ஆனால் ஜெர்மனியில் உள்ள எதிர்க்கட்சிகள் பெரும்பாலானோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதற்கு அனுமதி வழங்குமா என்று ஐரோப்பிய நாடு ஒப்புதல் குறித்து பல எதிர்பார்ப்புகள் உள்ளது.