என்ன செய்தாலும் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியலையா? இதை செய்தால் முழுமையான பலன் கிடைக்கும்!!
இன்று பெரும்பாலானோர் உடல் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியமால் திணறி வருகின்றனர்.அக்குள்,அந்தரங்கம் மற்றும் உள்ளங்கைகளில் அதிகளவு வியர்வை சுரப்பதால் அங்கு கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகி நாற்றத்தை கிளப்புகிறது.
இவ்வாறு அதிகளவு வியர்வை சுரந்தால் எத்தனை முறை குளித்தாலும் உடலில் துர்நற்றம் வீசுவது கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.அதிகளவு அசைவ உணவுகள்,காரசார உணவுகள்,மசாலா உணவுகளை உட்கொள்வதால் இதுபோன்ற வியர்வை நாற்றம் உண்டாகிறது.
சிலர் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த வாசனை திரவியங்களை உடலுக்கு பயன்படுத்துவார்கள்.ஆனால் இது முற்றிலும் தவறான பழக்கம்.கெமிக்கல் நிறைந்த வாசனை திரவியங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்.எனவே இயற்கையான முறையில் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து அனைவரும் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
தீர்வு 01:
*ராேஸ் வாட்டர்
*பச்சை பயிறு மாவு
*தயிர்
இந்த மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து பேஸ்டாக்கி அக்குள் பகுதியில் அப்ளை செய்து சுத்தம் செய்தால் வியர்வை நாற்றம் கட்டுப்படும்.
தீர்வு 02:
*வேப்பிலை
*மஞ்சள்
ஒரு கைப்பிடி வேப்பிலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை வேப்பிலை சாற்றில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.இதை அக்குள் பகுதியில் அப்ளை செய்து குளித்து வந்தால் வியர்வை துர்நாற்றம் கட்டுப்படும்.
தீர்வு 03:
*வெட்டி வேர் பொடி
*சந்தனப் பொடி
*வேப்பிலை பொடி
மேலே குறிப்பிட்டுள்ள மூன்று பொடிகளையும் சம அளவு எடுத்து குளிக்கும் நீரில் கலந்து ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.மறுநாள் இந்த நீரை பயன்படுத்தி குளிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கி உடலில் நறுமணம் வீசத் தொடங்கும்.
தீர்வு 04:
*எலுமிச்சை தோல்
*மஞ்சள் தூள்
ஒரு எலுமிச்சை பழத்தின் தோலில் மஞ்சள் கலந்து அக்குள் பகுதியில் வைத்து ஸ்க்ரப் செய்யவும்.10 நிமிடங்கள் வரை ஸ்க்ரப் செய்த பிறகு குளிர்ந்த நீரில் குளிக்கவும்.இவ்வாறு செய்து வந்தால் அக்குளில் இருந்து வீசும் துர்நாற்றம் கட்டுப்படும்.